"குழந்தை பிறந்திருக்கிறது"
"நம் இனமா, மனிதனா?"
Wednesday, September 19, 2007
"ஐந்து வார்த்தைகளில் கதை- பிறப்பு"
Posted by நிலாரசிகன் at 4:42 AM
Subscribe to:
Post Comments (Atom)
கதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
"குழந்தை பிறந்திருக்கிறது"
"நம் இனமா, மனிதனா?"
Posted by நிலாரசிகன் at 4:42 AM
7 Comments:
"...மனிதனா?" என்ற ஒற்றை வார்த்தையில் நிறைந்திருக்கின்றன, ஆயிரமாயிரம் கேள்விகள்.
சகாரா.
puthumaiyana padaippu..
snegamudan nirandhari..
இது ரொம்ப பெரிய அறிவாளி கூட்டமா இருக்கும் போல இருக்கே..
மஹா,
ஏதோ தமிழ் பிடிச்சுருந்தா, இரண்டு நல்ல தமிழ் பாட்டு கேட்டோமா, நாலு நல்ல கடி நகைச்சுவையை படிச்சு ரசிச்சமான்னு இருந்துருக்க கூடாதா..
இந்த கதை, கவிதையெல்லாம் நீ படிக்கலைன்னு யாரு அழுதா..
இப்ப பாரு ஏதோ மிலிட்டிரிக்காரவங்க code word ல பேசிக்கிறமாதிரி கதாசிரியர் சொல்லி இருக்காரு மத்தவங்களும் அதை புரிஞ்சுகிட்டு நல்லா இருக்குன்னு சொல்றாங்க..
ஆனா நீ, கதாசிரியர் என்ன சொல்ல வந்துருக்காரு எதை அர்த்தம் பண்ணியிருக்காருன்னு சரியா விளங்காம பேந்த பேந்த முழிச்சுகிட்டு யோசிச்சுட்டு இருக்க...
இதெல்லாம் தேவையா உனக்கு.. இதுக்கு பேசாம யோசிப்பவர் blog ல போயி ஒரு புதிரை படிச்சுருக்கலாம்.."
இப்படிதாங்க உங்களோட இந்த ஐந்து வார்த்தை கதைகளை படிச்சுட்டு மண்டையை சொரிஞ்சுகிட்டு இருக்கேன்..
நான் ஏதோ கதைன்னா, அதுக்கு ஒரு தலைப்பு, கதா பாத்திரங்கள், ஆரம்பம், முடிவு, ஏதாவது நக்கலோ, நகைச்சுவையோ அப்பறம் பல morals னு இருந்து அது ஓரளவுக்கு தெளிவா படிக்கிறவங்களை போய்ச் சேரும்னு நினைத்தேன்.. அது மட்டுமல்ல கதாசிரியர் என்ன கதை சொல்லி இருக்குறாருன்னு படிக்கிற, இல்லை கேட்குற மக்களை போய்ச் சேர்ந்தா தான் அது கதைனும் நினைச்சுகிட்டு இருந்தேன்..
ஆனா இது கொஞ்சம் புது மாதிரியா இருக்கு..
நீங்க போட்டுருக்குற ஐந்து வார்த்தைகளிலும் நிறைய அர்த்தம் இருக்குறதால அதுலேருந்து நிறைய கதை பின்ன முடியுறதால, எது நீங்க சொல்ல வர்ற அர்த்தம், நான் நீங்க சொல்ல வந்துருக்குற கதையை கண்டுபிடிச்சேனா இல்லையான்னே தெரியலீங்க..
எனக்கு உங்க முயற்சி புரியுதுங்க..
எவ்வளவு நாள்தான் என்னை மாதிரி சின்ன புள்ள மூளைக்கு எட்டுற மாதிரி கதை எழுதுவீங்க.. உங்களை மாதிரி அறிவாளிகளுக்கு புரியுற மாதிரி ஐந்து வார்த்தையில் சுருக்கா நச்சுன்னு எழுதி இருக்கீங்க..
ஆனா எனக்கு அது புரியலை.. ஆனாலும் ஆசை விட மாட்டேங்குது..
பிறப்பு கதையை பற்றி எனக்கு தோன்றிய முதல் அர்த்தம் அதை ஒரு கதையா சொல்றேங்க (என் பாணியில்),
"ஒரு நாட்டுப்பற்று மிக்க இளைஞன் (ஒரு போலீஸ்னு வச்சுக்கோங்க), அவருகிட்ட அவருக்கு குழந்தை பிறந்திருக்குதுன்னு சொல்றாங்க, உடனே அவரு பிறந்திருக்கிறது மனிதன் தானே, நாட்டை அழிக்க கூடிய தீங்குகள் ஏதும் செய்ய கூடிய மிருகம் ஏதும் பிறக்கவில்லையே அப்படீன்னு அர்த்தம் பண்ணிக்கிற மாதிரி போலீஸுக்கு ஏற்ற கம்பீரத்துடனும், அதட்டலுடனும் "நம் இனமா, மனிதனா?"னு கேட்குறாரு சரியாங்க...
இல்லைனா இப்படி எதுவும் சொல்ல வர்றீங்களா..
சில பேய் படக்கதைகள் மாதிரி "குழந்தையோட அப்பாவுக்கு இல்ல சாமியாருங்களுக்கோ முன்னாடியே தெரிய வந்துருது பிறக்க போற குழந்தை பேய்க்குழந்தைனு, அதனால அவுங்க குழந்தை பிறந்தவுடனே மனிதக்குழந்தை தானே பிறந்திருக்குன்னு பதட்டமா அப்படி கேள்வி கேட்குறாங்களா...
இல்லை குழந்தை பிறந்தவுடனே "ஆணா.. பெண்ணான்னு பிரிச்சு பார்க்காம முதலில் மனிதனானு பாருங்க..." அப்படின்னு சொல்ல வர்றீங்களா..
கடவுளே..
இந்த ஐந்து வார்த்தை கதையில நிறைய யோசிக்கிறேங்க..
கண்ண கட்டுதுங்க...
mahalakshmi
intha kathaikku oru artham thamil manitha inam mattumillamal matra inamum pesura mozhinnu thonuthu. enna ippavum kanna kattuthaa, kattatum kattatum.
intha inoru aynthu vaartha kathai
kathai puriyutha?
"kanna kattucha illaya"
vidiyal virumbi.
//கடவுளே..
இந்த ஐந்து வார்த்தை கதையில நிறைய யோசிக்கிறேங்க..//
வாசிப்பவர்களை யோசிக்க வைப்பதற்குத்தான் இம்மாதிரி கதைகள்.
விடியல் விரும்பி அவர்களே,
எனக்கு கதை புரிஞ்சுடுச்சுங்க. நீங்க சொல்ற மாதிரி பிற்காலத்தில் மனித இனமல்லாத வேற்று கிரக வாசிகள் கூட தமிழ் மொழி பேசுவாங்கன்னு நினைக்கிறப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்குங்கோ...
ஆனால் இந்த மாதிரி கதையில் ஒவ்வொரு punctuations, வார்த்தை எல்லாத்தையும் miss பண்ணாம correct-a படிச்சு அர்த்தம் புரிஞ்சுக்கனும்ங்கிறது நான் கத்துகிட்ட பாடமும் கூடங்க..
நிலாரசிகன், யோசிப்பவர் and விடியல் விரும்பி,
மனித இனமல்லாத அந்த வேற்று கிரக வாசிகளின் இனப் பெயர் என்ன?
பூமியில் வாழும் ஆறறிவு இனத்திற்கு மனிதன் என்று பெயர்..
செவ்வாயில் வாழும் ஆறறிவு இனத்திற்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்.?...
சனியில் வாழும் ஆறறிவு இனத்திற்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்.?...
அவர்களுக்கும் பூமியின் மனித இனத்தை போன்று ஆறறிவு தான் இருக்குமா..
இல்லை அதிகமாக இருக்குமா...
இதில் யாரேனும் கற்பனை செய்து, கதை புனைந்துள்ளீர்களா... அல்லது புனைந்துள்ளார்களா..?...
கதை பெயர் மறந்து விட்டது, ஆனால் சுஜாதா எழுதிருக்கிறார்...!
Nice try Nila...
Blasting fiction.
Post a Comment