Sunday, September 16, 2007

கொடுத்துவைத்தவர்...(இருநிமிடக் கதை)

கடற்கரை.

பிள்ளையார் சிலையை கரைக்க ஒரு கூட்டம்
கடல்நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

சடசடவென்று வேகமாக பெய்யத் துவங்கியது மழை.

மழைக்கு ஒதுங்க அருகிலிருக்கும் கோவிலுக்குள் ஓடத்துவங்கினர்
சிறுவர் சிறுமியர்...ஓட்டமும் நடையுமாக கோவிலுக்குள் நுழைந்தனர்
பெரியவர்கள்.

மழையில் நனைந்துகொண்டே மெதுவாய் கோவிலை அடைந்தனர்
காதலர்கள்.

கடல்நீரில் கரையவேண்டிய பிள்ளையார்
மழைநீரில் கரைந்துகொண்டிருந்தார்.

"கொடுத்துவச்ச பிள்ளையாருப்பா உப்புத்தண்ணில
கர்யாம நல்ல தண்ணீல கர்யிராரு"

முணுமுணுத்துக்கொண்டே சென்றாள் பஞ்சுமிட்டாய்
விற்கும் கிழவி.

2 Comments:

காஞ்சனை said...

நிதர்சனத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.

சகாரா.

யோசிப்பவர் said...

Nice Piece