Wednesday, September 26, 2007

சிகப்பு ரோஜா
மும்பை,அந்தேரி ரயில்நிலையம்.

கடந்து செல்லும் மின்சார ரயிலின் வேகமும்,கால்மீது நடந்து செல்லும்
மனிதர்களின் வேகமும் அவசர வாழ்க்கையை எடுத்துரைத்தது.

வினோத் அமைதியாக சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தான்.

எரிமலையாக வெடித்துக்கொண்டிருந்தாள், வித்யா.

"மொதல்ல என் பிரண்ட் சொன்னப்போ நான் நம்பலை, என் வினோத்தை
பத்தி எனக்குத் தெரியும் நீ உன் வேலைய பாருடின்னு சொல்லிட்டேன், பட்
இப்போ, இன்னைக்கு என் ரெண்டு கண்ணாலேயும் பார்த்தப்பறம்தான் புரியுது
அவ சொன்னது உண்மைன்னு!"


"இதுவரைக்கும் தப்பான எண்ணத்தோட நீ என்கிட்ட ஒரு நாளும் வந்ததில்லையே வினோத்!
நீயா இப்படி?"

பொறிந்து தள்ளினாள் வித்யா.

"ரெட் லைட் ஏரியாவுக்குள்ள நீ போறத பஸ்ல இருந்து பார்த்தேன் ,கடவுளே அது நீ இல்லாம
வேற யாராவதா இருந்திருக்ககூடாதா?

பொறுமையாய் அவள் பேசுவதை எவ்வித சலனமுமின்றி கேட்டுக்கொண்டிருந்த வினோத்
பேச ஆரம்பித்தான்.

"என்னை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்ளோதானா வித்யா? உன்மேல் என் உயிரையே வச்சிருக்கேன்
என் காதலை சந்தேகப்படுற உரிமை உனக்குக்கூட கிடையாது.

இன்னைக்கு காலைல எங்க வீட்டுப் பக்கத்துல ஒரு சின்னப் பையன் பிச்சை எடுத்துட்டு
இருந்தான்,விசாரிச்சப்போ அவனை யாரோ கடத்திட்டு வந்துட்டங்கங்கற உண்மை தெரிஞ்சுது.
அவன் அம்மா சிகப்பு விளக்கு பகுதியில பாலியல் தொழில்ல
ஈடுபடுறவங்கன்னும் தெரிஞ்சுது.
என் நண்பர்கள் சிலபேரும்,போலீஸும் சேர்ந்து அவனை மீட்டோம்.

அப்புறமா அவனை ரெட் லைட் ஏரியாவுல கொண்டு போய் விட்டுட்டு திரும்பி வரும்போதுதான் நீ பாத்திருக்கன்னு நினைக்கறேன்"

கடந்து செல்லும் ரயிலைப்போல தடதடவென்று பேசிவிட்டு
நடக்க ஆரம்பித்தான் வினோத்.

பெத்தவனால் நாலாயிரத்திற்கு விற்கப்பட்டு,பாலியல் தொழிலில்
பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டு,கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தவளை காப்பாற்றி, உடலை நேசிக்காமல் உள்ளம் மட்டும்
நேசித்தவன் கோபமாய் நடந்துசெல்வதை பரிதவிப்புடன்
பார்த்துக்கொண்டிருந்தாள் வித்யா.

12 Comments:

மஹாலெட்சுமி said...

கதை மிக அருமை..
கதையின் தலைப்பான சிகப்பு ரோஜா எதைக் குறிக்கிறது.?.
காதலின் உண்ணதத் தன்மையை உணர்த்தும் சின்னமாவா..
இல்லை வித்யாவையா.?.
இல்லை காதலின் முழுமையாய் ஒளிரும் வினோத்தையா.?.

தானே ஒரு சிகப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்துருக்கோம், நம்ப போயி எப்படி வினோத்கிட்ட கேக்குறது.. எனக்கு அந்த தகுதியில்லையேன்னு தன்னை தாழ்த்திக்காம, குழப்பிக்காம, தனக்குள் தோன்றிய சந்தேகத்தை தைரியமா, உரிமையா கேட்ட வித்யா மீது எந்த தப்பும் இல்லை.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. சந்தேக நெருடலோடு அவதிப்படுறதை விட கேட்டு தெளிஞ்சுக்கிறது ரொம்ப நல்லது..

வினோத்‍ பற்றி என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னே தெரியலை..
நீங்க எதை, யாரை நினைத்து இந்த கதைக்கு 'சிகப்பு ரோஜா'ன்னு வச்சீங்கன்னு தெரியலை..
எனக்கு வினோத் தான் சிகப்பு ரோஜாவா தெரியிறாப்புல..
அழகா உணர்வோடு, உண்மையோடு கோபப் படும்போதும் சரி, உண்மையான காதலின் அர்த்தம் உணர்ந்தவன் என்று நான் உணரும்போதும் சரி... He is glittering like anything..

ஆனா ஒன்னு, இதெல்லாம் கதையில மட்டும் தான் சாத்தியமா இருக்குமோன்னு தோணுது..

இந்த காலத்தில் உள்ள ஆண்கள், அதுவும் இந்திய ஆண்களில் யாரேனும் வினோத் மாதிரி இருப்பாங்களா என்பது எட்டா பனங்காயோ என்றே தோன்றுகிறது.

சகாரா said...

கலக்கிட்டீங்க போங்க.
//என் காதலை சந்தேகப்படுற உரிமை உனக்குக்கூட கிடையாது.//
வினோத்தின் இந்த வார்த்தைகள் காதலின் மென்மையை, அழுத்தமான ஆழத்தை உணர்த்துவதாக உள்ளது. உண்மைக் காதலுக்கு அர்த்தமாக வினோத்தை காட்டியிருக்கிறீர்கள். வித்யாவின் படபடப்பு அருமை.

கதைக்கு ஏற்ற தலைப்பு "சிகப்பு ரோஜா". பளிச்சென்று இருக்கிறது.

- சகாரா.

யோசிப்பவர் said...

//இந்த காலத்தில் உள்ள ஆண்கள், அதுவும் இந்திய ஆண்களில் யாரேனும் வினோத் மாதிரி இருப்பாங்களா என்பது எட்டா பனங்காயோ என்றே தோன்றுகிறது.
//
அதென்ன இந்திய ஆண்களில்?! வன்மையாக கண்டிக்கிறேன்.

உங்களுடைய தேடுதல் போதிய அளவில் இல்லை என்றுதான் சொல்வேன்.

Anonymous said...

Mahalakhshmi oda comments migavum.. arumai.... intha kalathula aangal yarum apdi iruka mataanga... kavithailayum, kathailayum matunthaan ithellam unara mudiyum....

karapanaiya irunthaalum... vinod character ullam silirka vaikirathu... paiyana meetu red light la irunthaalu antha thaedi poi oppadachau... so great...

Duraimangai said...

Mahalakhshmi yin comments migavum.. arumai.... intha kalathula aangal yarum apdi iruka mataanga... kavithailayum, kathailayum matunthaan ithellam unara mudiyum....

karpanaiya irunthaalum... vinod character ullam silirka vaikirathu... kutti paiyana meetu red light la irunthaalu antha amma va thaedi poi oppadachathu... so great...

Duraimangai said...

Mahalakhshmi oda comments migavum.. arumai.... intha kalathula aangal yarum apdi iruka mataanga... kavithailayum, kathailayum matunthaan ithellam unara mudiyum....

karapanaiya irunthaalum... vinod character ullam silirka vaikirathu... paiyana meetu red light la irunthaalu antha thaedi poi oppadachau... so great...

மஹாலெட்சுமி said...

யோசிப்பவரே,

//அதென்ன இந்திய ஆண்களில்?!
உங்களுடைய தேடுதல் போதிய அளவில் இல்லை//

என்ன சொல்லவர்றீங்க, உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுமே நான் சொன்ன எட்டா பனங்காய்னு சொல்ல வர்றீங்களா.. இப்படிதான் கொஞ்சம் நக்கலாவும், உள்குத்தலாவும் எழுதணும்னு நினைத்தேன் உங்களுடைய பின்னூட்டத்தை படித்தவுடன். ஆனால் அன்று பின்னூட்டம் எழுத நேரமில்லாததால் உடனே என் பதிலை தங்களுக்கு தெரிவிக்க முடியவில்லை.
தாங்கள் வன்மையாக கண்டித்தாலும், மென்மையாக கண்டித்தாலும் வெறும் கற்பனைக் கதைகளையும், கவிதைகளையும் வைத்து இந்திய ஆண்கள் உண்மைக் காதல் புருஷர்கள், அவர்கள் எதிர்பார்ப்பது உண்மை உள்ளத்தையும், உண்மைக் காதலையும் மட்டுமே என்ற திண்ணமான எண்ணத்திற்கு என்னால் வர முடியாது. நான் கேள்விப்பட்ட உண்மை சம்பவங்களிலும் சரி, சந்தித்த மனிதர்களிலும் சரி, இந்திய ஆண்கள் காதலின் மீதும், காதலியின் மீதும் குறுகிய எண்ணோட்டம் உடையவர்களே.
தான் எப்படிப்பட்டவனாக இருப்பினும் சரி தான் தேர்ந்தெடுப்பவள் அழகாகவும், தூய்மையானவளாகவும் [இங்கே உடல் முதன்மை, உள்ளம் இரண்டாமிடம்], தன் ஆதிக்கத்தை முதன்மையாக உணருபவளாகவும் இருக்க வேண்டுமென்ற எண்ணமுடைய ஆண்ம‌கன்களை கொண்ட நிஜக் காதல் கதைகளையே நான் கேள்விப்பட்டுள்ளேன்..

என்ன‌தான் திரைப்ப‌ட‌ங்க‌ளிலும், நாவ‌ல்க‌ளிலும், க‌தைக‌ளிலும் வ‌ரும் காத‌ல் புருஷ‌ர்கள் உள்ளத்தை சிலிர்க்க‌ வைத்தாலும் அது வெறும் நிழ‌ல் என்ற உண்மை எனக்கு நன்றாகவே புரிந்துள்ளது. நான் எந்த ஒரு தேடுதல் வேட்டையும் நடத்தவில்லை. நிழலின் உண்மை புரிந்ததும் வாழ்க்கையில் கிட்டிய‌ சந்தர்ப்பங்களினாலும், அனுபவங்களினாலும்; நிஜத்தில் நிழலின் சாயல் கூட எனக்கு தெரியாமலிருப்பதும் என‌க்கு ஏற்பட்ட சந்தர்ப்பங்களினாலும் அனுபவங்களினாலுமே.
என‌து தேடுத‌ல் குறைவு என்ற‌ த‌ங்க‌ளின் க‌ருத்திற்கு நான் முன் மொழிகிறேன். ஆயினும் தேடுத‌ல் குறைவு, அத‌னால்தான் என் வாழ்வில் இந்த‌க் க‌ற்ப‌னைக் க‌தைக‌ளில் வ‌ரும் மாதிரியான நிஜ‌க் காதல்புருஷர்களை இந்தக் காலத்தில் நான் சந்திக்க‌வோ, கேள்விப்ப‌ட‌வோ இல்லை என்று தாங்க‌ள் கூறினால் அதை மென்மையாக நான் ம‌றுக்க‌ விரும்புகிறேன். நான் ஒன்றும் என் வாழ்வில் காதலர்களையோ, ஆண்மகன்களையோ, காதல் கதைகளையோ கேள்விப்படாதவளோ, சந்திக்காதவளோ இல்லையே..
ஒரு பெண்ணின் 25 வ‌ருட‌ வாழ்வில் த‌ங்க‌ளின் க‌தைக‌ளில் வ‌ருவ‌து போன்ற‌ ஒரு நிஜ‌க் காத‌ல் ம‌க‌னை கேள்விப்ப‌ட‌வோ ச‌ந்திக்க‌வோ இல்லை என்ப‌தற்கு தேடுத‌ல் குறைவு என்ற‌ த‌ங்க‌ளின் க‌ருத்தும் பதிலும் எனக்கு திருப்தி அளிக்க‌வில்லை.. மாறாக கலி முத்தி..காத‌லின் வ‌லிமையும், உண்மையும் குறைவாக‌வும், குறுகிய‌ எண்ண‌த்துட‌னும் கூடிய இந்திய ஆண்ம‌க‌ன்க‌ள் அதிக‌மாக‌ உள்ளார்க‌ள் என்று என‌க்கு தாங்க‌ள் ப‌தில் கூறுவ‌தாக பொருள்ப‌ட‌வில்லையா த‌ங்க‌ளுக்கு?

நான் இன்னும் எனது பதிலை நிறைவு செய்ய‌வில்லை...
நாளை வ‌ந்து நிறைவு செய்கிறேன்.. பேருந்துக்கு நேரமாயிற்று..
தங்க‌ளை காக்க‌ வைப்ப‌த‌ற்கு ம‌ன்னிக்க‌வும்.
ப‌தில் ம‌ட‌ல் இன்னும் கொஞ்ச‌ம் நீளும்...
நிலார‌சிக‌னும், அவ‌ர‌து ர‌சிக பெருமக்க‌ளும் என்னை ம‌ன்னிக்க‌ வேண்டும்..
துரைம‌ங்கை அவ‌ர்க‌ளுக்கு என‌து ந‌ன்றிக‌ள்.

மங்களூர் சிவா said...

நிலா ரசிகன்

கதை நல்லா இருந்தது.

@மஹாலெட்சுமி

//
நான் இன்னும் எனது பதிலை நிறைவு செய்ய‌வில்லை...
நாளை வ‌ந்து நிறைவு செய்கிறேன்..
//

நாளைக்குமா??

(இன்னைக்கு போட்ட பதிலே படிக்க முடியலை அவ்ளோ பெரிசு)

சகாரா said...

//இந்திய ஆண்கள் காதலின் மீதும், காதலியின் மீதும் குறுகிய எண்ணோட்டம் உடையவர்களே.//
ம‌ன்னிக்கவும் மஹாலெட்சுமி. தங்களின் இக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
//ஆண்கள் உண்மைக் காதல் புருஷர்கள், அவர்கள் எதிர்பார்ப்பது உண்மை உள்ளத்தையும், உண்மைக் காதலையும் மட்டுமே என்ற திண்ணமான எண்ணத்திற்கு என்னால் வர முடியாது.//
இது உங்களின் (மனப்)பார்வைப் பிழை. சில உண்மைக் காதலர்கள் எதிர்பார்ப்பது உள்ளத்தைத் தான், மற்றவை கூட அவர்களுக்கு இரண்டாம் பட்சம் தான். இதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.
நிழல் வேறு நிஜம் வேறு தான். ஆனால், நிஜமின்றி நிழல் இல்லை.

- சகாரா.

யோசிப்பவர் said...

மிஸ். மஹாலெட்சுமி,

உங்களது சூடான பின்னூட்டத்தை படித்ததும் சிரிப்புதான் வருகிறது. எனக்கு இந்த உங்கள் உண்மை உள்ளம், உண்மை காதல் கான்செப்டே புரியவில்லை. முதலில் உண்மை காதல்னா என்னவென்று சொல்ல முடியுமா? உடலை விட்டு உள்ளத்தை மட்டும் காதலிக்க சொல்கிறீர்களா? "காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டது என்றால் நீ காதலிக்க ஒரு நாய்குட்டி போதும். அதுவே உடல் சம்பந்தப்பட்டதென்றால், நீ காதலிக்க ஒரு விலைமகள் போதும்." என்று வைரமுத்து சொல்வது போல், காதலில் மனம், உடல் இரண்டையும் வேறுபடுத்தி பார்ப்பதே தவறு. இவற்றில் ஒன்றில்லாவிட்டால் கூட அது காதல் கிடையாது. இதில் உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளத்துக்கு இரண்டாம் இடம் கொடுக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆக உங்கள் கருத்துப்படி உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறீர்களா?

//நான் கேள்விப்பட்ட உண்மை சம்பவங்களிலும் சரி, சந்தித்த மனிதர்களிலும் சரி, இந்திய ஆண்கள் காதலின் மீதும், காதலியின் மீதும் குறுகிய எண்ணோட்டம் உடையவர்களே.
//

ஆனால் நான் சந்தித்த மனிதர்களில், பல பேர் தங்களின் துணைவியின் மீதுள்ள காதலால், சில சமயம் அவர்களின் தவறான முடிவுகளுக்கு துணை போவதைகூட பார்த்திருக்கிறேன். அவர்களை பார்க்கும்பொழுது சில சமயம் எனக்கு பைத்தியக்காரர்கள் போல் கூடத் தோன்றும். அப்படிப் பட்ட ஆண்கள் யாரையும் நீங்கள் இதுவரை சந்திக்காதது உங்கள் துரதிர்ஷ்டமே!

ஆனால் நான் சந்தித்த பெண்களில், பெருவாரியானவர்கள் எப்படிப் பட்டவர்கள் தெரியுமா? கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணம் சிறிதுமில்லாமல், விடிய விடிய ஒருத்தனோடு ஒரு மாதம் கடலை போடுவது. அடுத்த மாதம், அவன் போரடித்துவிட்டால், வேறு ஒருவனோடு கடலை போடுவது. சில பேர் உருகி உருகி காதலிப்பவனை, அதே போல் காதலித்து விட்டு, கடைசியில், இல்லை, எங்க வீட்டில் ஏசுகிறார்கள் என்று சொல்லி நோகாமல் டாட்டா காட்டுவது. இது போன்ற பெண்களையே அதிகமாக சந்தித்திருக்கும் நான், உங்கள் வழக்கப்படியே பெண்கள் எல்லோருமே மோசமானவர்கள் என்ற முடிவுக்கு வந்து விடட்டுமா? அப்படி ஒரு முடிவுக்கு வருவது சிறிதும் நியாயமாகாது.

இப்படியெல்லாம் நானும் விதண்டாவாதமாக பதிலளித்துக் கொண்டே போகலாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெளிவு படுத்த விரும்புகிறேன்(இது விதண்டாவாதம் அல்ல).

ஆண்கள் எல்லோரும் காதலில் நல்லவர்கள் என்று நான் நியாயப்படுத்தவில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே எப்பொழுதும் ஒரு சமூகத்திலிருக்கின்றனர். இதில் ஆண்கள் மட்டும் நல்லவர்களில் விதிவிலக்கானவர்கள் அல்ல. அதே போல் பெண்கள் கெட்டவர்களில் விதிவிலக்கானவர்களும் அல்ல. கெட்டவர்களை விலக்கி, நல்லவர்களை கண்டுகொள்வது உங்களது தேடலில்தான் உள்ளது. உங்கள் தேடல் தொடர என் வாழ்த்துக்கள்!!!;-)

மஹாலெட்சுமி said...

மிஸ்டர்.யோசிப்பவர்,

யோசிப்ப‌ரை சிரிப்ப‌வ‌ராக்குன‌துல‌ என‌க்கு ம‌கிழ்ச்சி தாங்க‌.
நான் சொல்லி இருக்குற‌தை நீங்க‌ த‌ப்பா புரிஞ்சுகிட்டீங்க‌ளா, இல்லை நீங்க சொல்ல‌ வ‌ந்ததை நான் த‌ப்பா புரிஞ்சுருக்கேனான்னு ச‌ரியா தெரிய‌லை..
நான் குறி வைத்துள்ளது.. அழ‌கு, தூய்மை. இதை கார‌ண‌ப்ப‌டுத்தி பெண்களை உதாசினப்படுத்துறவங்க, சந்தேகப் பேய்ல கொள்ளுறவங்களை பத்தி நான் கேள்விப்பட்டுகிட்டுருக்குறதா சொல்லி இருக்கேன்.
விலை மகளுக்குள்ளும் உணர்ச்சிகள் இருக்கும், காதல் இருக்கும், நேசம் இருக்கும், காமம் இருக்கும், உயிரும் இருக்கும்.. நான் அந்தக் கதைக்கோ, வாதத்திற்கோ வரலை...
பெண்களை உதாசினப்படுத்துறதும், ஏமாத்துறதும், ஆதிக்கம் செலுத்துறதும் அதிக‌மாகிட்டு வ‌ருவ‌தாவும், இந்த‌க் க‌தைக‌ளில் வ‌ருவ‌து மாதிரியான காத‌ல‌ன்க‌ளை நான் இன்னும் பார்க்க‌லை அப்ப‌டின்னு தான் கூறி இருக்கேன்.
நான் ஆண்க‌ள் எல்லாரும் மோச‌மான‌வ‌ங்க‌ன்னு சொல்ல‌லை.. ஆனா நான் கேள்விப்ப‌ட்டவ‌ங்க, பார்த்த‌வ‌ங்க‌ளோட‌ எண்ணோட்டமெல்லாம் குறுகி போயிருக்கே ஏன்னு வ‌ருத்த‌ப்ப‌ட்டுருக்கேன்..
க‌தைக‌ளில் வ‌ருகிற‌மாதிரியான ஒரு க‌தாநாய‌க‌னை நான் ஏன் இன்னும் என் வாழ்வில் ச‌ந்திக்க‌வோ, கேள்விப்ப‌ட‌வோ இல்லைன்னு ஆதங்கப்படதான் முனைந்துள்ளேன்...

யோசிப்ப‌வ‌ர் ம‌ற்றும் ச‌காரா,
நான் ந‌ல்ல ஆண்க‌ளே இ ந்த‌ உல‌க‌த்தில் இல்லைன்னோ, எல்லா ஆண்க‌ளுமே மோச‌மான‌வ‌ங்க‌னோ சொல்ல‌லை. அதே மாதிரி நான் இந்த‌ உல‌க‌த்தை இருட்டா பார்த்துகிட்டு இருக்குற‌தால இந்த‌ உல‌க‌மே இருட்டுன்னோ, இந்த உல‌க‌த்தில‌ வெளிச்ச‌ம்ங்கிற ஒன்னு இல்லைனோ சொல்லும் அள‌விற்கு நான் கிண‌ற்றுத்த‌வ‌ளையும் அல்ல‌, அதே ச‌ம‌ய‌த்தில் ந‌ல்லா ப‌டிச்ச‌ நாலுபேரு சொன்னாங்க‌ இந்த‌ உல‌க‌மே வெளிச்ச‌ம்னு அத‌னால நான் பார்த்த இருட்டெல்லாம் வெளிச்ச‌ம் தான்னும் என்னால சொல்ல முடிய‌லை..
ஏன் இப்ப‌டி இருட்டு இருக்கு, ஏன் இன்னும் நான் வெளிச்ச‌த்தை பார்க்க‌லைன்னு ஆத‌ங்க‌ப் ப‌ட்டிருக்கேன்..

தீக்குள்ள விர‌லை வ‌ச்சா சுடும்னு பெரிய‌வ‌ங்க‌, அனுப‌வ‌ப்ப‌ட்ட‌வ‌ங்க‌ சொல்லியும் புரிஞ்சுக்காம, நான் தீக்குள்ள‌ விர‌லை வ‌ச்சுட்டுதான் புரிஞ்சுப்பேன்னு சொல்லுற‌ ஜென்ம‌ம் அல்ல‌..
நான் தீயையாவ‌து பார்க்க‌ணும்னு ஆசைப்ப‌டுற ஒரு ஜென்ம‌ம்.

என்னோட‌ க‌ருத்துக்க‌ள் தங்க‌ளை காய‌ப்ப‌டுத்தி இருந்தா ம‌ன்னிக்க‌னும்..
அதே நேர‌த்தில் என் க‌ருத்தை இன்னும் நீங்க யாரும் புரிஞ்சுக்க‌லைன்னே நான் நினைக்கிறேன். அதை இந்த‌ மாதிரி பெரிய‌ பின்னூட்ட‌மிட்டு நிலார‌சிக‌னின் ர‌சிக‌ப் பெரும‌க்க‌ளை நான் ப‌ய‌முறுத்த விரும்ப‌வில்லை. அதை ஒரு க‌தையாவோ அல்ல‌து க‌ட்டுரையாவோ உங்க‌ளுக்கு தெரிய‌ப்ப‌டுத்துறேன்..

என‌து பின்னூட்ட‌த்தையும்,கருத்துக்களையும் ப‌டித்து அத‌ற்கும் ம‌திப்பு கொடுத்து ப‌திலிட்ட‌ உங்க‌ளுக்கு என‌து ந‌ன்றிக‌ள்.

sarav said...

யோசிப்பவர் மற்றும் மஹா அவர்களுக்கு எனது வணக்கம்,
புரிதலில் ஏற்பட்ட சிறு பிழை, இருவருக்குள்ளும் ஒரு சொற்போரை ஏற்படுத்தி விட்டது. எனினும் மிக சுவாரஷ்யமாக இருந்தது. இருவருமே மிக சிறப்பாக மிக ஆழ்ந்த கருத்துக்களை வெளிஇட்டது இன்னும் சிறப்பு.

You both admired me very much. Keep fighting... :-)