வேலை
"ஏன் வேலைய விட்ட?"
"பூமி பிடிக்கல"
Wednesday, September 19, 2007
Subscribe to:
Post Comments (Atom)
கதைகள்தான் பால்யத்தில் என்னோடு பயணித்த நண்பர்களில் மிக முக்கிய நண்பன். கதைகளில்தான் எனக்கான உலகை கண்டுகொண்டேன். வாழ்வெங்கும் விரவிக்கிடக்கும் கதைகள்தான் எப்போதும் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.
9 Comments:
Hi நிலா,
உங்கள் ஐந்து வார்த்தைக் கதை மி்கவும் அருமை..
விஜி
தங்கள் கற்பனை இப்பிரபஞ்ச எல்லையைத் தொடட்டும்.
சகாரா.
ஏற்கனவே சொன்ன மாதிரி எனக்கு எதுவும் சரியா புரியாததால இப்படியெல்லாம் எழுதுறேன்..
தப்பா எடுத்துக்காதீங்க..
வேலையை விடுறது என்ன தற்கொலை பண்ணிக்கிற மாதிரியா..
பொதுவா தற்கொலைக்கு முயற்சி பண்றவங்க தானே "பூமி பிடிக்கல, வாழ்க்கை பிடிக்கல, உலகம் பிடிக்கலன்னு பிணாத்துவாங்க....
இல்லை இப்படி எதுவுமா.."மேலோகத்தில் கடவுள் ஒரு தேவரைப் பார்த்து ஏன்பா பிரம்மாகிட்ட கஷ்டபட்டு recommend பண்ணி பூமியில் மனிதனாக பிறந்து வாழுகின்ற ஒரு வேலை வாங்கித் தந்தா வேலையை விட்டுட்டு இப்படி வந்து நிக்கிறியேன்னு கேட்க, அதுக்கு அந்த தேவர், பூமி பிடிக்கலைன்னு சொல்றாரா.."..
இல்லை ... வேலையை விட்டவரு தினபூமி, wikipedia அந்த மாதிரி பூமியை கம்பெனியின் சின்னமா வச்சுருக்குற கம்பெனியிலோ இல்ல பூமிய சம்பந்தபடுத்துற மாதிரி கம்பெனியின் பேரு வச்சுருக்குற ஒரு கம்பெனியில் வேலை பார்த்துருக்குறானோ..
அதான் இப்படி டபுள் meaning ல பூமி பிடிக்கலன்னு சொல்றானா..
தெரியாம தான் கேட்குறேன்,
பூமி பிடிக்காத அளவுக்கு கதாநாயகன் என்ன வேலைதாங்க பார்த்தான்..??...
சாக்கடை எடுக்குற வேலையா.. இல்லை பிணங்களை எறிக்கிற வேலையா....
ம்ம்ம்.. ஒண்ணும் புரியமாட்டேங்குதே...
மஹாலெட்சுமி,
உங்கல் கேள்விகளுக்கு நிலாரசிகன் என்ன பதில் கொடுக்கப் போறார்னு தெரியலை. ஆனா நான் ஒரு பதில் சொல்ல ஆசைப் படறேன். அது என்னன்னா,
"நீங்க இன்னும் பூமியிலேயே இருக்கீங்க!"
யோசிப்பவரே,
தாங்கள் எதை அர்த்தம் பண்ணி சொன்னீங்களோ எனக்குத் தெரியலை..
நானே சொல்றேன்.. நானும் சரி, என் சிந்தனைகளும், கற்பனைகளும் சரி இந்த பூமிக்குள் தான் உள்ளது.. இன்னும் சொல்லப்போனா இந்த பூமிக்குள்ளேயே வெளி உலகம் ஒன்றை சரியாக புரிந்துகொள்ளாதவளும், தெரிந்துகொள்ளாதவளும், பார்க்காதவளும் கூட..
அதற்காக எனக்கு ரொம்ப பிடித்த ஒன்றில் தெரியாதவற்றை விளக்கி கூற கேட்டு தெளிந்து கொள்வதில் தவறில்லை என்றே எனக்குப் புரியாதவைகளை இங்கு எனக்குத் தெரிந்தபாணியில் தெரிவித்துள்ளேன்..
நிலாரசிகன்தான் என்னுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறணும்னு கட்டாயம் ஏதும் இருக்குதுங்களா.. அப்படி ஏதும் இல்லைனா இந்த ஐந்து வார்த்தை கதையின் உண்மை ஆழத்தை, கதாசிரியரின் ஆழத்தோடு புரிந்து கொண்ட யாரேனும் தங்களின் ஓய்வு நேரத்தில் இந்த blogல் எனக்கு பதில் கூறி விளக்கலாமே..
தற்சமயம் எனக்குத் தோன்றிய மற்ற சில thoughts..
"செய்யும் தொழிலே தெய்வம் என்னும் வாக்கிற்கு இணங்க தான் செய்யும் தொழிலை தான் வாழும் இந்த பூமியாக நினைத்து பணிபுரிய ஆனால் அவனுக்கு சரியான மதிப்பும், மரியாதையையும் கிடைக்காமல், அவனுக்கு பல அநீதிகள் நடப்பதால் அவன் வேலையை விட்டுட்டு இப்படி சொல்றானோ..
இல்லை ... அண்ட சராசரங்களில் பூமியை control பண்ணுற வேலையை ஒருத்தர் விட்டுறாரு (அதாவது இந்த நவக்கிரக நாயகர்கள் மாதிரி, இந்த பூமியை கட்டி காக்குற ஒரு கோள் தேவர் இந்த பிரபஞ்சத்தை ஆளும் கடவுளிடம் சென்று பல அநியாயங்கள் நிகழும் இந்த பூமியை கட்டிக் காக்குற வேலை வேணாம்னு சொல்றாரா..)
நிலாரசிகன்,
இந்த ஐந்து வார்த்தைகதையில் எனக்கு சில தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன..
எனது free time-il அத உங்களுக்கு தெரியப்படுத்துறேன்..
//பூமி பிடிக்காத அளவுக்கு கதாநாயகன் என்ன வேலைதாங்க பார்த்தான்..??...
சாக்கடை எடுக்குற வேலையா.. இல்லை பிணங்களை எறிக்கிற வேலையா....//
சாக்கடை எடுப்பதையும்,பிணங்களை எறிவதையும் மகிழ்வுடன் செய்யும் உழைப்பாளிகளை சந்தித்திருக்கிறேன்.
எவ்வளவுதான் சலித்துக்கொண்டாலும் அத்தொழிலே அவர்களுக்கு தெய்வம். அத்தொழிலே அவர்களுக்கு உணவளிக்கும் அட்சயபாத்திரம்.
இது விஞ்ஞானச்சிறுகதை. இந்த உரையாடல் நடப்பது ஏதோ,எங்கோ ஒரு இடத்தில்(பூமிக்கு வெளியே) சந்திரனாகவும் இருக்கலாம்,செவ்வாய்யாகவும் இருக்கலாம்.
மெய்ப்படும் நாளும் வரலாம்.
மஹாலட்சுமி,
//இல்லை ... அண்ட சராசரங்களில் பூமியை control பண்ணுற வேலையை ஒருத்தர் விட்டுறாரு (அதாவது இந்த நவக்கிரக நாயகர்கள் மாதிரி, இந்த பூமியை கட்டி காக்குற ஒரு கோள் தேவர் இந்த பிரபஞ்சத்தை ஆளும் கடவுளிடம் சென்று பல அநியாயங்கள் நிகழும் இந்த பூமியை கட்டிக் காக்குற வேலை வேணாம்னு சொல்றாரா..)
//
உங்களின் இந்தப் புரிதல், நன்றாக இருக்கிறது. இது போன்ற புனைவு கதைகளின் தன்மை, கதையை(அல்லது, அதன் முடிவை), வாசகனின் புரிதலுக்கு(கற்பனைக்கே) விட்டு விடும் சுவாரஸ்யமான ரகத்தை சேர்ந்தவை!!
நிலாரசிகன்,
//சாக்கடை எடுப்பதையும்,பிணங்களை எறிவதையும் மகிழ்வுடன் செய்யும் உழைப்பாளிகளை சந்தித்திருக்கிறேன்.
எவ்வளவுதான் சலித்துக்கொண்டாலும் அத்தொழிலே அவர்களுக்கு தெய்வம். அத்தொழிலே அவர்களுக்கு உணவளிக்கும் அட்சயபாத்திரம்.//
நான் கூறியதை நீங்க வேறு விதமா எடுத்துகிட்டீங்க..
சாக்கடை அள்ளுறவங்க, பிணத்தை எறிக்கிறவங்க...இவுங்களாலெல்லாம் அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் பூமியை ரொம்ப அழகா, பசுமையா, உயிரோட்டமா, ஒரு தெய்வீக மணத்தோடு பார்க்க முடியாத நிலை.. இல்லீங்களா..
நம்பளை விட அவுங்களுக்குத்தான் இந்த பூமி மீது அளவு கட ந்த அக்கறை இருக்கும்.. ஒரு நாளாவது இந்த இடுகாட்டிற்கு பிணங்கள் ஏதும் வரக்கூடாது, தான் ஒரு நாளாவது அழுகை வடியும் சோக முகங்களை பார்க்காமல் இருக்க வேண்டும் என்ற நிறைவேறாத, நிறைவேற்றமுடியாத ஒரு வேண்டுதல் வெட்டியானின் மனதில் இருக்கும் என்று நான் நினைத்ததுண்டு... ஒரு நல்ல வேண்டுதல் நிறைவேறாத மன வேதனையிலும், தான் மட்டும் ஏன் வாழ்வின் கடையாக இந்த பூமியை பார்க்க வேண்டிய அவல நிலை என்ற மன அழுத்தத்திலும் "தனக்கு இந்த பூமி பிடிக்கவில்லை, தான் செய்யும் இந்த வேலை வேண்டாம்" என்று முடிவெடுத்திருக்கலாம் என்று நினைத்தே நான் அவ்வாறு கூறினேன்....
யோசிப்பவரே,
தங்கள் blogல் உள்ள விஞ்ஞான கதைகளை படித்த பின் என்னால் எளிதில் நிலாரசிகனின் ஐந்து வார்த்தைக் கதைகளின் கருவை உள்வாங்கிக் கொள்ள முடிகிறது...
நிலாரசிகன் மற்றும் யோசிப்பவரே,
தங்களின் விளக்கங்களுக்கு மிக்க நன்றி.
ஐந்து வார்த்தைகளில், ஆறு வார்த்தைகளில் கதை என்பது புதுமையாக இருப்பினும், ஐந்து ஆறு வார்த்தைகளில் கதையின் கருவை உணர்த்துவது ஆச்சர்யமாய் வாய் பிளக்க வைப்பினும்..., தாங்கள் அவற்றை கதை என்று பெயரிடுவதிலும், கதை ரகத்தோடு சேர்ப்பதிலும் ஏனோ என் மனதில் சிறிது ஒவ்வாமை உள்ளது...
தங்களின் இந்த படைப்புகளை கதை என்று பெயரிடாமல் வேறு முறையில் பெயரிடலாம் என்று தோணுகிறது...
அல்லது.. ஐந்து வார்த்தையில் கதை, ஆறு வார்த்தையில் கதை என்று கூறாமல், வேறு விதமாக கூறினால் இன்னும் நல்லா இருக்குமேன்னு தோணுது..
அது படிப்பவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்க வேண்டும் என்பதும் என் அவா..
மஹாலட்சுமி,
//தாங்கள் அவற்றை கதை என்று பெயரிடுவதிலும், கதை ரகத்தோடு சேர்ப்பதிலும் ஏனோ என் மனதில் சிறிது ஒவ்வாமை உள்ளது...//
இது கதை என்பதில் ஏன் உங்களுக்கு ஒவ்வாமை உள்ளது என்று எனக்குப் புரியவில்லை. இது நாங்களே புதிதாக கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய கதை வகை அல்ல. ஏற்கெனவே, ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் உள்ளவைதான். தமிழில் கூட சுஜாதா முன்பே அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
(என்னுடைய இந்த வகை கதைகளின் ஒரு பின்னூட்டத்தில் சில ஆங்கில மாதிரி கதைகளை, நளாயனி அவர்கள் தொகுத்தளித்திருக்கிறார்!)
Post a Comment