Sunday, September 16, 2007

கறுப்பு வானவில் (இருநிமிடக் கதை)

இவனை நம்பி வந்திருக்க கூடாதோ? அடச்சே ஏன் இப்படி
எல்லாம் மனசு நினைக்குது? அவன் ரொம்ப நல்லவன்... மனசுக்குள் வினோத்தை பற்றி
பலவாறாக எண்ணியபடியே நகம் கடித்துக்கொண்டிருந்தேன்
இரவு மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது..

பத்து மணிக்கே வர்றேன்னு சொன்ன‌வ‌ன் இன்னும் வ‌ர‌லை. எப்ப‌வுமே ப‌க‌ல்ல‌ ம‌ட்டும்தான் வெளியில‌ வ‌ருவேன்.முத‌ல் முறையா இராத்திரி நேர‌ம்... அதுவும் இந்த‌ ப‌ஸ்டாண்டில் காத்து நிற்கிற‌து என்ன‌வோ போல‌
இருக்கு...வினோத் எப்படா வ‌ருவே நீ?

"ஹாய்" பின்னாலிருந்து கேட்ட‌ வினோத்தின் குர‌லில் திடுக்கிட்டு திரும்பினேன்.

"உன‌க்கு கொஞ்ச‌மாவ‌து அறிவிருக்கா,இப்ப‌டி லேட்டாக்கி என்னை பயமுறுத்திட்டியே!" திட்டிக்கொண்டே அவ‌ன் காரில் ஏறினேன்.

கார் வேக‌மெடுக்க‌த் தொட‌ங்கிய‌து.

ஏசி காற்றில் என் கூந்த‌ல் க‌லைவ‌தை
ர‌சித்த‌வாறே என் க‌ர‌ம்ப‌ற்றி பேச‌ ஆர‌ம்பித்தான் வினோத்

"சாரிமா...யாருக்கும் தெரியாம‌ காரை எடுத்துகிட்டு வ‌ர்ற‌துக்குள்ள‌ போதும்போதும்னு ஆயிடுச்சு"

"வினோத்..ரொம்ப‌ யோசிட்டுத்தான் உன்கூட‌ வ‌ர்றேன்.. என்னை ஏமாத்திட‌ மாட்டியே?"

"என்ன‌டா செல்ல‌ம் என்மேல் ந‌ம்பிக்கை இல்லையா?...அது ச‌ரி...இது என்ன‌ புருவ‌மா இல்ல‌
க‌றுப்பு வான‌வில்லா" என் புருவ‌த்தில் முத்த‌மிட்ட‌ ஆர‌ம்பித்தான் வினோத்.

அதிகாலை ஆறு ம‌ணி.

சே இவ‌னை ந‌ம்பி இப்ப‌டி மோச‌ம் போய்டோமே! இவ‌னை யோக்கிய‌ன்னு
நினைச்சு வ‌ந்தேன்ல‌ என் புத்திய‌ எதால‌ அடிக்க‌ற‌து?
இவ்வ‌ள‌வு ம‌ட்ட‌மான‌வ‌னா இவ‌ன்?

வினோத்தை திட்டிக்கொண்டே ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்தேன் ப‌ஸ்டாண்டிலிருந்து என் வீடு நோக்கி.

இர‌ண்டாயிர‌ம் பேசிவிட்டு இருநூறு குறைச்சு த‌ந்தா கோப‌ம் வ‌ருமா வ‌ராதா?

4 Comments:

Anonymous said...

"ammuvagiya naan" padam patheengala? yenaku antha padam niyabagam than vanthathu intha kathai paditha pothu.... kathaiya na avlova rasikkala aanal intha kathaiyil iruntha nidharsanam manathai suttathu, thottathu...

snegamudan anbu thamizhachi,
nirandhari.

Nilofer Anbarasu said...

The story is good and you hold the tempo till the last line. Still we expect some more unique touches from you...

Kavi said...

Hai..
The story is very nice..
This type of 2 min-stories r good and touching..
Continue on ur way with more stories and success...

மங்களூர் சிவா said...

//
இர‌ண்டாயிர‌ம் பேசிவிட்டு இருநூறு குறைச்சு த‌ந்தா கோப‌ம் வ‌ருமா வ‌ராதா?

//
ஹை கோர்ட்ல கேஸ் போடலாம்ல??