Tuesday, December 23, 2008

காதல்கதைகள் - கதை 1

முன்கதைக்குறிப்பு:

[நான் கண்ட,கேட்ட காதல்கதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை அனைத்தும் நடந்த கதைகள்.
சற்று புனைவுடன் எழுதியிருக்கிறேன்,பெயர்கள் கற்பனையே]

சக்தியும்,ப்ரியம்வதாவும்:

பனி விழும் அதிகாலையில் இப்படித்தான் இந்தக்குட்டிக்கதையை ஆரம்பிக்க வேண்டும் என்று
நினைத்தேன். காரணம் ப்ரியம்வதாவை நினைத்து மெழுகுவர்த்திரியை ஏற்றி வைத்துக்கொண்டு
அழுதுகொண்டிருக்கும் சக்தியின் காதல் பனி விழும் அதிகாலை போல மிக அற்புதமானதுதான்.
ஆனால் என்னசெய்வது காதலில் பிரிவுதான் ஞானத்தை தருகிறது என்பதுபோல் சக்தி கொஞ்சநாட்களாக
தத்துவம் பேச ஆரம்பித்திருந்தான். ப்ரியம்வதாவின் பிரிவுதான் காரணம்.

சக்தி ஒரு மிகச்சிறந்த எழுத்தாளன். சிறுகதைகளில் அடுத்த ஜெ.கே இவன் தான் என்றார்கள் நண்பர்கள்.
அவனது ரசிகையாக அறிமுகமானாள் ப்ரியம்வதா. இருவரும் முதன்முதலாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்தான்
சந்தித்தார்கள்.

"எனக்கு உங்க கதைன்னா ரொம்ப இஷ்டம் சக்தி...ஐ ஜஸ்ட் லவ் இட்..எப்படி இவ்ளோ நல்லா எழுதறீங்க?" விழிகள் விரிய
கேட்டவளிடம் எழுத்தாளன் என்கிற சிறு கர்வத்துடன் பதில் சொன்னான் சக்தி.

"ரொம்ப சிம்பிள்ங்க...அதாவது பார்த்தீங்கன்னா..19ம் நூற்றாண்டின் இறுதியில புகழ்பெற்ற..... " ஏதேதோ சொல்லி அரைமணிநேரம்
பேசினான். அதன் பிறகு எஸ்.எம்.எஸும்,செல்லுமாக நட்பு மலர்ந்து காதலில் விழுந்தார்கள் இருவரும்.

ப்ரியம்வதாவும் இவனுக்காக கஷ்டப்பட்டு கவிதைகள் எழுதி அனுப்புவாள்

"நீ இல்லாவிட்டால் வானம் கறுக்கிறது மேகம் சிவக்கிறது வாழ்வின் அந்திவரை நீ வேண்டும் இல்லை மரணத்தை
முத்தமிடும் என் இதழ்கள்" என்று அவள் எழுதும் கவிதைகளை விட அதில் ஒளிந்திருக்கும் காதல் அழகாய் கண்சிமிட்டும்.

திடீரென்று ஒரு நாள் சக்திக்கு அவளிடமிருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.

"என் தம்பிக்கு நாம பழகறது பிடிக்கலை சக்தி. எனக்கும் மாப்பிள்ளை பார்க்கிறாங்க.
இனிமேல் என்கிட்ட பேசவோ,என்னை சந்திக்கவோ முயற்சிக்காத,குட்பை"

பித்துப்பிடித்தவன்போல் திரிந்தான் சக்தி. ப்ரியங்களால் வதைத்து சென்ற அந்த ப்ரியம்வதாவின் நினைவில்
தினம் தினம் துடித்தான். எழுதுவதை மொத்தமாக நிறுத்திவிட்டான். இப்பொழுதெல்லாம் எங்காவது தடதடக்கும்
ரயிலின் ஓசைகேட்டால் மட்டும் சக்தியின் கண்களில் அவனையும் அறியாமல் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

எனக்கு சக்தியை பார்க்க பாவமாக இருக்கிறது. காதலால் தன்னிலை இழந்தவர்களில் சக்தியும் ஒருவன்.
ப்ரியம்வதா யாரை வதைத்துக்கொண்டிருக்கிறாளோ தெரியவில்லை.

-நிலாரசிகன்.

10 Comments:

Unknown said...

அவள் புன்னகையை இவன் காதல் என்று ஏன் நினைக்கவேண்டும்...எல்லா ப்ரியங்களும் காதல் அல்ல என்று சக்தியிடம் சொல்லுங்கள் நிலா உடனடி நடவடிக்கையாக சக்தியை இந்தப் பாடலை கேட்கச் செய்யலாம் 'ஆள்வார்பேட்டை ஆண்டவா...ஒரே காதல் ஊரில் இல்லையடா. மேலும் தற்சமயம் கிடைத்த செய்தி யாரோ சக்தியை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தமிழ்ச்செல்வி எனுயுடன் கவிதைகள் பற்றி கலந்துரையாடுவதாக கேள்விப்பட்டேன்....கதை நன்று, சம்பவங்கள் போதாமையைத் தவிர கதையில் குறையொன்றுமில்லை. வாழ்த்துக்கள் நிலா.

Satish N said...

அடடா ... கேட்கவே ரொம்ப சோகமா இருக்கே. நா காதல் கத்திரிக்காய் நு பண்ணினது இல்ல, பட், இந்த கதை ரொம்பவே உருக்கமா இருக்கு. அந்த நண்பருக்கு என் ரிகார்ட்ஸ்

நிலாரசிகன் said...

//அவள் புன்னகையை இவன் காதல் என்று ஏன் நினைக்கவேண்டும்...//

அவள் புன்னகையை காதல் என்று இவன் நினைக்கவில்லை. அவளே பலமுறை இவனை காதலிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறாள். பின்னூட்டத்திற்கு நன்றி தோழி.

நிலாரசிகன் said...

நன்றி சதீஷ் (நீங்க கத்திரிக்காய் சாப்பிடுவதில்லை என்பது எனக்கும் தெரியும்,ஆனால் காதலிக்கவில்லை என்பது.... :)

அன்புடன் அருணா said...

உங்களிடமிருந்து இப்படி ஒரு கதையா?? ரொம்ப சாதாரணமான கதை...நிலாரசிகன்.
அன்புடன் அருணா

நிலாரசிகன் said...

அன்புள்ள அருணா,

இது என் கற்பனையில் உதித்த கதை அல்ல. நடந்ததை அப்படியே பதிவு செய்திருக்கிறேன். இந்தக்கதைக்குப் பின்னாலிருக்கும் ஒரு நிஜ காதலின் வலி என்னை எழுத வைத்தது. இனி வரும் கதைகளில் சற்று அதிக கவனம் கொள்கிறேன். நன்றி.

Anu said...

Pirivin kaaranam azhuthamanathaga theriyavillai. Priyamvadha vin nilamai yaar kandaar!! Priyamvadha vadhaikka pattathanaal ippadi nadanthu irukkalam..

Anonymous said...

ITHU PADIKKUMPOTHAI EN KANKALIL NEER VALIKERATHU,ELLA KATHALUM KADAISIYEL EPPADITHAN MUDIKERATHU. TOUCHING MY HEARTS LINES..........SEKAR....

Unknown said...

Manathin valiyai varthaiyil konduvaruvathu oru siramana kalai

Valthukkal nila

---
Pennin nilai ennavo theriyen

so

-sugu

இரசிகை said...

ithai neengathaan yezhuthineengala nila?