"சொன்னா புரிஞ்சுக்கடா" கவலையுடன் சொன்னான் என் நண்பன் ஜாக்கி.
"முடியாது, அவளுக்கு முத்தம் கொடுக்கத்தான் போறேன்..."
"நீ மட்டும் அவளுக்கு முத்தம் கொடுத்து பாரு அப்புறம் உன்ன பார்க்க வரவே மாட்டா"
"சே சே அவளுக்கு எம்மேல ஆசை அதிகம்...என்னை காதலிக்கிறது அவ கண்ணுலயே தெரியுதுடா"
"ஒரு பொண்ணு நம்மள பார்த்துட்டா உடனே அவ நம்மள காதலிக்கறான்னு நினைக்கறது தப்புடா" அறிவுரை செய்ய ஆரம்பித்தான் ஜாக்கி.
"நிறுத்துடா, என் செல்லம் மத்த பொண்ணுங்க மாதிரி இல்ல மச்சி, என் மேல உயிரையே வச்சிருக்கா"
"சரி இனி உன்னை திருத்த முடியாது, என்ன வேணாலும் செய்" கோபமாக திட்டிவிட்டு எழுந்துபோய் விட்டான் ஜாக்கி.
என் காதலிக்கு நான் முத்தம் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் இவனுக்கு என்ன? ஒருவேளை இவனுக்கும் அவ மேல ஏதாவது.... சே சே அப்படியெல்லாம் இருக்காது..சரி நாளைக்கு காதலர்தினம், நாளைக்கு முத்தம் கொடுத்தா வாழ்க்கை முழுசும் மறக்கவே மாட்டா என் பியூட்டி.... நினைத்தவாறே உறங்கிவிட்டேன்.
பிப்ரவரி 14, நேரம் காலை 9 மணி.
அதோ வருகிறாள் என் தேவதை...
என்ன கொடுமை இது! யாரோ ஒருவனுடன் வருகிறாளே!.....என்னைக் காண்பித்து ஏதோ சொல்கிறாளே?...இருவரும்
சிரித்துக் கொள்கிறார்களே...என்ன பேசுகிறார்கள் என்று புரியவில்லையே
கூண்டுக்குள் சுருண்டு படுத்துக்கொண்டு அழ ஆரம்பித்தேன்.
மனிதக்குரங்காக பிறந்தால் இப்படித்தான். மனிதர்களின் மொழி புரிவதில்லை.
Tuesday, February 26, 2008
முத்தே முத்தம்மா....
Posted by நிலாரசிகன் at 1:18 AM
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
ரெம்பவே சிம்பிளான கரு. சிறிய கதை. சூப்பர்.
இன்னும் அதிகமாக எழுதுங்கள்.
நன்றி.
உங்கள் மனதை வருடும் கதைகளுக்கு படித்துப் பாருங்கள்.
http://manthodumanathai.blogspot.com/2008/02/blog-post.html
என்றும் மனதோடு மனதாய்... உங்கள் புகழன்.
Post a Comment