"காதலிக்கும் போது ஒரு வார்த்தை பேசமாட்டாளான்னு
பின்னால சுத்தி சுத்தி வந்தீங்க இப்போ நான் எது சொன்னாலும் பிடிக்கலை"
"எது சொன்னாலும் எதிர்த்து எதிர்த்து பேசுற இல்ல, அப்புறம் எப்படி பிடிக்கும்?"
"எங்க அம்மாவீட்டுக்கு போகணும்னு சொல்லிடக்கூடாதே உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்திடும்"
"அதென்னடி மாசாமாசம் அம்மாவீட்டுக்கு போறது? அதுவும் சென்னைல இருந்து திருச்சிக்கு! போறதுக்கும் வர்றதுக்கும் செலவு கணக்குப்பாருடி...அப்புறம் போற எண்ணமே வராது!"
"அப்பப்பா! எப்போ பார்த்தாலும் கணக்கு பார்த்துகிட்டே இருக்கீங்களே! போன பிறவில கணக்கு வாத்தியாரா இருந்தீங்களோ! சே! வெறுப்பா இருக்கு"
"இப்படி கணக்கு பார்க்கலன்னா அப்புறம் எப்படி நான் குடும்பம் நடத்தறது. மளிகை கடைக்காரன்ல இருந்து பால்காரன்வரைக்கும் யார் பதில் சொல்றது? நம்மகிட்ட பணம்காய்கிற மரமெல்லாம் இல்ல"
"நீங்க ரெண்டுபேரும் இப்படி மோதிகிட்டு இருக்கறத உங்க பொண்ணு பார்த்துட்டு ஏதோ எழுத ஆரம்பிச்சுட்டா" சொல்லிப்போனார் அப்பா.
இருவருமாய் சென்று மகள்முன்பு அமர்ந்தோம்.
செல்லமகள் வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தாள்.
"செல்லம் எங்கள பார்த்தவுடனே ஓடிவந்து ஏதோ எழுதினியாமே,தாத்தா சொன்னார்...என்னமா எழுதின?"
"எலியும் பூனையும், பாம்பும் கீரியும் போல அடிக்கடி மோதிக்கொள்ளும் உயிரினம் பற்றி எழுதுகன்னு வீட்டுப்பாடம் கொடுத்தாங்கப்பா அதுக்கு பதில் எழுதினேன்பா" என்றாள் பிஞ்சுமகள்.
"என்னடா எழுதினே" ஆர்வமுடன் கேட்டோம் நானும் என் மனைவியும்.
"அப்பாவும் - அம்மாவும்" ன்னு எழுதினேன்மா என்றாள் முத்துப்பல்காட்டி.
வீட்டின்பாடத்தை வீட்டுப்பாடம் மூலமாய் உணர்ந்து வெட்கித் தவறுணர்ந்து நின்றோம்.
Friday, November 30, 2007
[+/-] |
வீட்டுப்பாடம் |
Tuesday, November 27, 2007
[+/-] |
நினைவெல்லாம் நித்யா... |
"மச்சான் எழுந்திரிடா இங்க பாரு உன் கதை பிரசுரமாயிருக்கு" சத்தம்போட்டு என்னை
எழுப்பினான் என் விடுதி அறைத்தோழன் பிரபு.
துள்ளி எழுந்து தமிழகத்தின் மிகப் பிரபலமான அந்த வார இதழில் என் சிறுகதையை
கண்டவுடன் கண்ணில் நீர்துளிர்த்துவிட்டது.
எத்தனை வருட தவம் இது! எத்தனை வருட முயற்சி இது! வானத்து தேவதைகளே
எங்கே சென்றீர்கள்? உலகப் புகழ்பெறப்போகும் எழுத்தாளனுக்கு கிடைத்த முதல்
பரிசுக்கு வாழ்த்து சொல்ல மாட்டீர்களா?
மேகங்களே இன்றுமட்டும் பூக்களை மழையாக பொழியுங்கள். சரித்திரத்தில் இடம்பெறப்போகும்
ஒரு முக்கிய எழுத்தாளன் இன்று பிறந்திருக்கிறான் என்று உலகிற்கு சொல்லுங்கள்.
என் கைகள் சிறகாக மாறி விண்ணோக்கி பறக்க ஆரம்பித்த நொடியில்...
"டேய் என்னடா அமைதியாகிட்ட?" உலுக்கிய நண்பன் என்னை மீண்டும் இவ்வுலகிற்கு
அழைத்துவந்தான்.
"மச்சான்,என்கிட்ட கூட சொல்லவே இல்லை எப்போடா கதைய அனுப்பினே?" ஆர்வமுடன் கேட்டான்
நண்பன்.
அப்பொழுதுதான் எனக்கு உறைத்தது. இந்தக் கதையை நான் அனுப்பவே இல்லையே! யார் அனுப்பி இருப்பார்கள்?
"நான் அனுப்பவே இல்லடா,எனக்கே ரொம்ப குழப்பமா இருக்கு....யார் அனுப்பி இருப்பாங்க?"
"என்னது நீ அனுப்பலையா? அப்போ யாரா இருக்கும்...ம்ம்...டேய் அவளாதான் இருக்கும்டா" கண்ணடித்தான்
நண்பன்.
நித்யாதான் அந்த "அவள்". என் காதலி. பூக்களின் மனித வடிவம். என் கல்லூரியில் படிக்கின்ற ஐந்தடிமல்லிச்சரம்.
அவள் அனுப்பி இருப்பாளா என்று எண்ணிக்கொண்டே
கல்லூரிக்கு சென்றேன்.
"கங்கிராட்ஸ் டா" கைகுடுத்தாள் நித்யா.
"ஏண்டி, என் கதைய பத்திரிக்கைக்கு அனுப்பினா சொல்லமாட்டியா" செல்லக்கோபத்துடன் கேட்டேன்.
"என்னடா சொல்ற,நான் அனுப்பலையே" குழப்பத்துடன் என்னைப் பார்த்தாள் என் நித்யா.
"என்னது நீ அனுப்பலையா? அப்போ எப்படி வந்தவுடனே கங்கிராட்ஸ் சொன்ன?"
"நோட்டீஸ் போர்ட்ல போட்டிருந்துச்சு அதனாலதான் சொன்னேன்"
"என்ன நடக்குதுன்னே புரியலை பத்திரிக்கைக்கு யார் அனுப்பினதுன்னு தெரியலை,அதுக்குள்ள நோட்டீஸ் போர்ட்ல வேற போட்டிருக்குன்னு சொல்ற, யார் இதை எல்லாம் பண்ணினது?"
"நான் தான்" பின்னாலிருந்து குரல்கேட்டது...
அங்கே...
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தேன்....மின்விசிறி நின்றிருந்தது...அறைத்தோழனின் குறட்டைச்சத்தம் தவிர
வேறு எதுவும் இல்லை...
அடடா எல்லாம் கனவா? சரி, கனவுலயாவது நம்ம கதைய பப்ளிஷ் பண்றாங்களே.... என்னை நானே சமாதான படுத்திக்கொண்டு மீண்டும் உறங்க சென்றேன்.
நித்யா சிரித்துக்கொண்டே கேட்டாள்.... "இதுதான் கதையா, இதே மாதிரி பலதடவை வந்துருச்சுடா"
தெரியும்டி செல்லம்...ஆனால் கனவுன்னு தெரிஞ்சதும் கதை முடிஞ்சிடும். ஆனா என் கதை இன்னும்
முடியலை...
அப்படியா எப்படி டா சொல்ற?
அதுவந்துடி....
இறந்த காதலியின் நினைவுகளுடன் தனியே இருட்டில் பேசிக்கொண்டிருந்த
என்னை கவலை கலந்த பயத்துடன் பார்த்து சென்றனர் என் விடுதி நண்பர்கள்.
Sunday, November 25, 2007
[+/-] |
தினமணிக் கதிரில் என் சிறுகதைகள் |
இன்றைக்கு(25/11/2007) தினமணிக் கதிரில்,என் இரண்டு இரு நிமிடக் கதைகளை(14வது கதை, இடுகாடு), வலைப்பதிவிலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கிறார்கள்.
இந்தச் செய்தியை காலையில் எனக்கு தொலைபேசியில் சொன்ன நண்பர் யோசிப்பவர். அவருக்கு என் நன்றிகள்.
Monday, November 19, 2007
[+/-] |
வசந்த மாளிகை - திரைவிமர்சனம். |
கே.எஸ். பிரகாஷ் ராவ்வின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் காதல்
திரைப்படம்.
சிவாஜி கணேசனின் நடிப்புக் கிரீடத்தில் மற்றுமொரு வைரம் இந்தப்படம்.
கே.வி.மஹாதேவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் மிக இனிமை.
கவிஞர்.கண்ணதாசனின் வரிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஒரு பணக்கார இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை
காதலுடன் சொல்கிறது "வசந்த மாளி...
பிரபல வார இதழில் இளம் பத்திரிக்கையாளனாக சேர்ந்திருக்கும் தன் காதலனை வாழ்த்துவதற்குச் சென்ற வாணிஸ்ரீ விக்கித்து நின்றாள்.
அந்த அறையின் ஜன்னலோர மேசைமீது வாயில் இரத்தம் கசிய இறந்துகிடந்தான் தன் மனம் கவர்ந்தவன்.
1973ம் வருடம் நடந்த இந்த துக்க நிகழ்வுக்கு முப்பத்தி நாலாவது நினைவு நாளை மனசுக்குள் மெளனமாய் நினைவு கூர்ந்தாள் வாணிஸ்ரீ.